Editorial / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், திணைக்களத் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளாமையால், இணைத்தலைவரான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அதிருப்தி தெரிவித்தார்.
பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்ற பல விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலுக்காக, திணைக்களத் தலைவர்கள், நேற்றைய அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், வவுனியா பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், பிரதேசச் செயலகக் கேட்போர் கூடத்தில், இன்று (10) கூடியபோது, செயற்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக, இணைத்தலைவர் சிவசக்தி ஆனந்தன் எம்.பி வினவினார்.
இதன்போது, திணைக்களத் தலைவர்கள் பிரசன்னமாகி இருக்காமையால், திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய முடியாமல்போனது.
இது குறித்து அதிருப்தி வெளியிட்ட சிவசக்தி ஆனந்தன் எம்.பி, பிரதேச அபவிருத்திக் குழுக் கூட்டங்கள் முக்கியமானவை என்பதால், திணைக்கள தலைவர்கள் முக்கியமாகக் கலந்துகொள்ள வேண்டுமெனவும் இங்கு மக்கள் பிரதிநிதிகள் உட்பட சில அரச அதிகாரிகளும் பிரசன்னமாகி இருக்கும்போது, திணைக்களத் தலைவர்கள் வராது விட்டால், கூட்டம் பயனற்றதாகிவிடுமெனவும் கூறினார்.
எனவே, பிரதேசச் செயலாளர் இது தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டுமென, அவர் வலியுறுத்தினார்.
அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு, இணைத்தலைவர்கள் 5 பேர் உள்ளபோதிலும், இன்றைய கூட்டத்தில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி மாத்திரமே இணைத்தலைவராகக் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago