Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 13 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - நானாட்டான் இந்து முன்பள்ளியின் வளர்ச்சிக்காக, யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகவும் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பவருமான திருமதி ஜானகி சீர்மாறன், 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை, இன்று (13) நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வு, இன்று (13) முற்பகல் 10 மணியளவில், நானாட்டானில் உள்ள இந்து முன்பள்ளிக் கட்டடத்தில் நடைபெற்றது.
இதில், நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் கோவில் அறங்காவலர் சபையினர், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்வியின் மூலமாகவே ஒரு சமூகம் வெற்றி பெற முடியும் என்பதால், தனது சேவைகளை வசதியற்ற முன்பள்ளிகளுக்கு வழங்கி வருவதாக, திருமதி ஜானகி சீர்மாறன் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago