Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 05 , பி.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு நகரில் சுற்றுவட்டம், பொதுச் சந்தை ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட இரண்டு பதாகைகள் நேற்று முன்தினம் (04) பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இலங்கையின் சுதந்திர தினம் கரிநாளாக தமிழர்கள் அனுஸ்டிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது, இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனின் படம் பொறிக்கப்பட்ட பதாகைகள் கட்டப்பட்டிருந்ததை பிரதேச மக்களையும் தமிழரசு கட்சியின் தொண்டர்களையும் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியிருந்தது.
சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் நடக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் து.ரவிகரன் கலந்துகொண்டிருக்கும் இந்த நிலையில், இந்தப் பதாகை கட்டப்பட்டிருந்தது.
இது சில விசமிகளின் செயல் எனக்கூறிய தமிழரசு கட்சியின் தொண்டர்கள், குறித்த பதாகையை அகற்றினார்கள். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago