Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 01 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் பகுதியில் சனிக்கிழமை(30) நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
7ஆம் வட்டாரம் சிவநகர் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இவரது உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .