2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

போயா தினத்தில் மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - ஹொறவப்பொத்தான வீதி, இறம்பைக்குளம் பகுதியில், போயா தினமான நேற்று மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வு பிரிவினருடன், போதை ஒழிப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ஹொறவப்பொத்தான வீதி, இறம்பைக்குளம் பகுதியில், மதுபானம் இரவு 8 மணியளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அப்பகுதியில் நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸார் தமது சோதனையின் போது 26 மதுபானத்தைக் கைப்பற்றியதுடன் 40 வயதுடைய நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .