2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

George   / 2016 நவம்பர் 18 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (18) முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு மேற்கு, கைவேலி, ஆத்திபுலவு, சுரேஸ்குடியிருப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய வாழ்வாதார உதவிகளை அதிகரிக்குமாறும் வழங்கப்படுகின்ற வாழ்வாதார உதவிகள் பாரபட்சமின்றி எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டுமெனவும் குறிப்பாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் சிறந்த முறையில் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த வாரத்தில் இக்கிராமங்களில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகளில் பாரபட்சம் இடம்பெற்றுள்ளதாகவும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .