Freelancer / 2023 செப்டெம்பர் 06 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலே கடந்த 2023.06.29 அன்று தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினரால் நீர் குழாய்கள் பொருத்துவதற்காக நிலத்தை தோண்டிய போது அங்கு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது
இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் இன்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது R
44 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
4 hours ago