Freelancer / 2024 ஏப்ரல் 03 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னாரில் 9 வயதுச் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர், வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
மன்னார், தலைமன்னார் பகுதியில் அண்மையில் 09 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் உடல் நலப் பாதிப்பு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை (03) குறித்த சந்தேகநபர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரை தேடும் பணியில் சிறைக்காவலர்களும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். R
1 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
23 Dec 2025