Editorial / 2019 நவம்பர் 23 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதி, மாந்தை சந்தியில் வைத்து, நேற்று (22) இரவு சுமார் 200 கிலோகிராம், கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் குறித்த கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
மகேந்திரா ரக வாகனத்தில் மீன் ஏற்றிச் செல்லும் விதத்தில் றெஜிபோம் பெட்டிகளில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட நிலையிலே 200 கிலோ 165 கிராம் எடை கொண்ட குறித்த கேரள கஞ்சா பொதிகள் மாந்தை சந்தியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதி வய்ந்தவை என தெரிய வருகின்றது.
இதன்போது நானாட்டான், பேசாலையைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
11 minute ago
14 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
58 minute ago
1 hours ago