Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மல்வத்து ஓயா நீரை, கட்டுக்கரை குளத்துக்கு அணைக்கட்டினூடாக கொண்டு சென்று தேக்கி வைத்து விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துதல் தொடர்பாக மன்னார் கட்டுக்கரை திட்டமிடல் முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீர்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்சா ஆகியோரை நேற்று புதன்கிழமை (23) சந்தித்து கலந்துரையாடினர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில், இடம்பெற்ற இந்த கலந்துரையாடல், கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது, கட்டுக்கரை குளத்திலுள்ள நீரை நம்பி சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விவசாயச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆனால், கட்டுக்கரை குளத்தில் தேக்கி வைக்கப்படும் நீர் சுமார் ஒரு மாத காலத்துக்கு மாத்திரமே போதுமானதாக உள்ளதாகவும், ஏனைய மாதங்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், கட்டுக்கரை திட்டமிடல் முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள், நீர்ப்பாசன அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
அதேவேளை மழை நீரை கட்டுக்கரை குளத்தில் சேமித்து வைப்பதற்கு, கட்டுக்கரை குளத்துக்கான வான் கதவு அமைத்தல் மற்றும் கட்டுக்கரை குளத்துக்கு நீர் பாய்ச்சும் வடிகான்கள் தூய்மைப்படுத்தப்படல் போன்றன பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், மன்னார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லை கொள்வனவு செய்தல் மற்றும் நெல்லை களஞ்சியப்படுத்துதல் போன்ற விடயங்கள், பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பிரச்சினைகளை கேட்டறிந்த பிரதமர், மல்வத்து ஓயா நீரை, கட்டுக்கரை குளத்தில் தேக்கி வைப்பதற்கான வேலைத்திட்டத்தை வெகு விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும் மன்னார் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
9 minute ago
36 minute ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
36 minute ago
16 Aug 2025
16 Aug 2025