Freelancer / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
வற்றாப்பளை மகா வித்தியாலயத்தில் நிலவிய குடிநீர் நெருக்கடிக்கு நேற்று முன்தினம் (20) தீர்வு காணப்பட்டுள்ளது.
இப்பாடசாலையில் 750 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில், பாடசாலையில் உள்ள கிணறு, குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலையில், பாடசாலைக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்தே மாணவர்களும் ஆசிரியர்களும் குடிநீரைப் பெற்று வந்தார்கள்.
இந்நிலையில், வற்றாப்பளை நண்பர்கள் வட்டம் ஊடாக ரூபாய் ஒன்றரை இலட்சம் நிதி செலவில் குடிநீருக்கான இணைப்புகள் வழங்கப்பட்டு, முல்லைத்தீவு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் பாடசாலைக்கான குடிநீர் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 30 இற்கு மேற்பட்ட பாடசாலைகளில் குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது. பாடசாலைகளில் குடிநீர் வசதியை உருவாக்கித் தருமாறு பெற்றோர்கள் முல்லைத்தீவு, துணுக்காய் வலய கல்வி பணிமனைகளில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

16 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
35 minute ago