Freelancer / 2023 மார்ச் 25 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா - பாரதிபுரம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி மாலை தனியார் வகுப்பு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்த இளைஞனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் குறித்த இளைஞன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - பாரதிபுரம் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டையடுத்து பொலிஸார் குறித்த சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதையடுத்து குறித்த இளைஞரைத் தேடிச் சென்றபோதும் இளைஞன் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
பொலிஸார் இளைஞனைக் கைது செய்யுமாறு கிராம அபிவிருத்திச் சங்கம் மண்டபத்தில் பொதுமக்கள் ஒன்றிணைந்து இன்று பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தலைமறைவாகிய இளைஞரைக் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் பொது மக்களுக்கு உறுதி வழங்கியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். R
13 minute ago
27 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
49 minute ago
1 hours ago