Super User / 2011 செப்டெம்பர் 30 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடக்கிலிருந்து மீள்குடியேறிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று கொடுக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில்இவணிக துறை அமைச்சருமான றிசாத் பதீயுதீன் தெரிவித்தார்.
விட்டு கொடுப்பும், முயற்ச்சியும், ஒற்றுமையுமே எமது முழுமையான மீள்குடியேற்றத்துக்கான மூலதனமாகும் எனவும் குறிப்பிட்டார்.
மன்னார் முசலி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 57 இலட்சம ரூபா செலவில் நிர்மாணிக்க்படவுள்ள பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (2011-09-29) இடம்பெற்றது.
இதன்போது, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,
வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் இடம்பெறுகின்றது. தமது மண்ணில் வாழ்ந்த மக்கள் தாயக பூமியில் மீள்குடியேறுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் என்ற வகையில் நாம் முன்னெடுத்துவருகின்றோம். எமது முயற்சிகளுக்கு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றது.
அதனை நாம் பொறுற்படுத்தவில்லை. நேர்மையும்இ நியாயமும் எம்மிடம் காணப்படுகின்ற தால்இ நாம் அதனை எதிர் கொள்ளும் துணிவை கொண்டுள்ளோம்.என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், வட மாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன், மன்னார் வலய கல்வி பணிப்பாளர் ஆர்பல் ரெவல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

28 minute ago
36 minute ago
43 minute ago
58 minute ago
Musaliyan Sunday, 02 October 2011 01:28 PM
அமைச்சருடைய பேச்சை கேட்பதற்கு நல்லாத்தான் இருக்குது. அந்த நேர்மையையும் நியாயத்தையும் செயலில் காட்டுவாரா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
43 minute ago
58 minute ago