Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 07 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்க்கம் எப்படி இருக்கும் என்று பலரும் கற்பனைக் கதை புனைவதுண்டு. அது ஜோதி வடிவில் இருக்கும்; மின்சாரம் இல்லாமலேயே கண்ணாடிக் குமிழ்கள் வர்ண ஜாலத்துடன் ஒளிவீசும். இது தங்கத்தினால் ஆன பெரிய மாளிகை போன்ற தோற்றத்தில் ஜொலிக்கும்.
எங்கும் மெல்லிய இசை வௌ்ளம்; தென்றலுடன் கீதம்; அழகிகளின் ஆனந்த நடனம்; மாளிகையினுள் பட்சிகள் இடையிடையே பறந்து, சஞ்சாரித்து மேனியைத் தொடும். பட்டுகளால் ஆன திரைச்சீலை. நவரத்தின மணிகளால் கோர்க்கப்பட்ட மாலைகள் தொங்கிக்கொண்டிருப்பதும் அவை அசையும்போது, எழும் மெல்லிய இனிய ஓசைகள் ‘கிணுகிணு’ என ஒலி எழுப்புவதும் ஓ... பரமானந்தம் ... பரமானந்தம்.
இங்கே பசி இருக்காது. இதயம் புல்லரித்துப் பூத்திருக்கும். இந்த உடலுக்கு எடை இருக்காது.
கடவுளுடன் வாழும் ஞானிகளுக்கு இன்ப பரவசம் இதைவிட மேலாக இருக்கும்.
வாழ்வியல் தரிசனம் 07/06/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .