Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2017 ஜூன் 20 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எமது அறிவு ஒரு முடிவு எடுத்துவிட்டால், அது, தான் சொன்னது சரி என்றே உறுதி செய்துவிடும். காலப்போக்கில் அதே அறிவு, தான், முன்னர் எண்ணியது பிழை என உணர்ந்து, தன்னை மாற்றிக் கொள்ளும். இதுதான் அறிவின் நிலை. அவ்வளவே!
விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் பல தடவைகள் இவ்வண்ணமே நிகழுகின்றன. ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்ததைப் பல வருடங்கள் கழிந்த பின்னர் வேறோரு விஞ்ஞானி அது பிழை என நிரூபித்து விடுகின்றார். ஆனால், இருவருக்கும் நோபல் பரிசு கிடைத்துவிடுகின்றது. இதில் தவறு கிடையாது. அறிவு முதிர்ந்துகொண்டே போனால் முடிவுகளும் மாறுபாடு அடையும்.
சாதாரண வாழ்க்கையில்கூட, எங்கள் முடிவுகளை, நாங்கள் அறிவுக்கேற்ப மாற்றிக் கொள்வதுண்டு.
ஆனால், ஞானம் அப்படியானதல்ல; அது முடிந்த முடிவுகளையே அகத்தினுள் ஆணி அடித்தால்போல், சொல்லிவிடும். அறிவின் மேலாம் ஞானம்.
வாழ்வியல் தரிசனம் 20/06/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
17 minute ago
1 hours ago
14 May 2025