Princiya Dixci / 2017 மே 18 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலம், நேரம் பார்த்து கருமங்களைச் செய்ய முற்படுபவர்கள் தொடர்ந்தும் தங்கள் கருமத்தைச் சிரத்தையுடன் செய்கின்றார்களா?
நாள், நட்சத்திரங்களைப் பார்க்கும் சிலர், அன்றுடன் அதனை மறந்து சோம்பலுடன் உறங்க ஆரம்பிப்பதுண்டு.
சுப காரியங்களை ஆரம்பிக்கும் போதுள்ள அதேயளவு உற்சாகம், மகிழ்ச்சியைத் தொடர்ந்தும் தங்களுடன் வைத்திருக்க வேண்டும்.
‘நல்லபடி வாழ்க’ என்பதன் அர்த்தம், ஊக்கத்துடன் என்றும் வாழ்க என்பதேயாகும். எமது முன்னோர்கள் எல்லாவற்றையும் காரண, காரியத்துடன்தான் செய்வார்கள். உற்சாகத்துடன் என்றும் பயணிப்பதற்காக வைபவங்கள், விழாக்கள் மூலம் ஆரம்பித்தார்கள்.
காலத்துக்கும் கௌரவம் வழங்குக.
வாழ்வியல் தரிசனம் 18/05/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .