Ilango Bharathy / 2022 நவம்பர் 10 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிரியர் தெரிவுப் பரீட்சைக்கான அனுமதி அட்டையில் நடிகை சன்னி லியோனியின் புகைப்படம் அச்சிடப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த நபர் ஒருவர் அண்மையில் அரச பாடசாலை ஆசிரியருக்கான ஆட்சேர்ப்புத் தெரிவுப் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு வந்த பரீட்சைக்கான அனுமதி அட்டையில் முன்னாள் ஆபாசப்பட நடிகை சன்னி லியோனியின் புகைப்படம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த அனுமதி அட்டையை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பதிவானது இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து
பலரும் கர்நாடக பாரதிய ஜனதா அரசை விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து "சட்ட மன்றத்திற்குள் ஆபாசப்படம் பார்க்கும் கட்சியிடம் இருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்" என எதிர்கட்சியான காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பி.எஸ் நாயுடு ட்விட்டரில் விமர்சித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது,
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026