Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Janu / 2025 ஜூன் 08 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில், இளம் பெண்கள் ஆண்களை 5 நிமிடம் கட்டிப்பிடிப்பதற்கு 50 யுவான் (இலங்கை மதிப்பில் 2080.38 ரூபாய்) செலுத்தும் புதிய டிரெண்ட் பிரபலமாகி வருகிறது. இதற்காக அங்கு பிரத்யேக செயலிகள் இயங்கி வருகின்றன. இதில் பெண்கள் கட்டிப்பிடிக்க விரும்பும் ஆண்களை முன்பதிவு செய்து கொள்கின்றனர்.
பின்னர் வணிக வளாகங்கள், ரயில் நிலைய சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பொது இடங்களில் இருவரும் சந்தித்து கட்டிப்பிடித்துக் கொள்கின்றனர். அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு பெண்கள் வழங்குவதாகவும் இவ்வாறு கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறைந்து ஆறுதல் கிடைப்பதாகவும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கட்டிப்பிடி வைத்தியத்திற்கு சீன பெண்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக கல்லூரி பெண்கள், அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் தங்களின் மன உளைச்சலை போக்கிக் கொள்ள இது மிகச்சிறந்த வழியாக உள்ளது என கூறுகின்றனர்.
அவர்கள் கட்டிப்பிடிப்பதற்கு ஒரு ஆணை தேர்வு செய்வதற்கு முன்பாக அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசி அறிமுகமாகிக் கொள்கின்றனர். தோற்றம், நடத்தை, பொறுமை மற்றும் உடல்வாகு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ஆணை தேர்வு செய்வதாகவும், பின்னர் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் அடைவதாகவும் சம்பந்தப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
20 Jun 2025