2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

ஐ-போனுக்காகக் காத்திருந்தவருக்கு அதிர்ச்சி

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 30 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ-போனை ஓடர் செய்துவிட்டு அதற்காக ஆவலுடன் காத்திருந்தவர் அதிர்ச்சியில் உறைந்து போன சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்த டேனியல் கரோல் என்பவர் சமீபத்தில் ஒன்லைன் தளத்தின் மூலமாக ஐ-போன் 13 பிரோ மேக்ஸ் தொலைபேசியை ஓர்டர் செய்துள்ளார்.

எனினும் அத் தொலைபேசி இரண்டு வாரங்கள் தாமதமாகவே வந்துள்ளது. இதனையடுத்து ஆவலுடன் அதனைப் பிரித்து பாரத்த  அவர் இதில்  இரண்டு சொக்லேட்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதன்பின்னர் மீண்டும் குறித்த ஒன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தன்னுடைய புகாரை அளித்துள்ளார்.

தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில்  இது குறித்து அந்நபர் வெளியிட்டுள்ள புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .