Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 19 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆலங்குடி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர் ‘கணவருடன் விவாகரத்தாகி 7 வயது மகனுடன் தனியாக வசித்து வரும் கார்த்திகா என்பவரை நீண்டகாலமாகக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர்களது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பரமேஸ்வரனின் குடும்பத்தினர், அவரை கார்த்திகாவிடம் இருந்து பிரித்து அழைத்துச்சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தனது காதலனை அவரது குடும்பத்தினர் கடத்திச்சென்று விட்டதாக கார்த்திகா கீரமங்கலம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து இருதரப்பினரையும் அழைத்துப் பொலிஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, பரமேஸ்வரன் கார்த்திகாவோடு வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரனின் தாயாரும் அவரது மூன்று சகோதரிகளும், வீதியில் உருண்டு ரகளையில் ஈடுபட்டனர் எனவும், பின்னர் பூச்சி மருந்தைக் குடித்து உயிரை மாய்க்க முயற்சி செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago