Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 மார்ச் 01 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவை சேர்ந்த நபரொருவர் நேரில் சந்திக்காத போலி இணையத்தளத்தள 'காதலிக்காக' 2 இலட்சம் அமெரிக்க டொலர்களை (சுமார் 2 கோடி ரூபா) அனுப்பி ஏமாந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேபர்விலேவை நகரைச் சேர்ந்த 48 வயதுடைய இவர் கடந்த இரண்டரை வருடங்களாக இணையத்தளம் மூலம் இப்பெண்ணுக்கு பணம் அனுப்பியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அவருடைய பெயரை வெளியிட பொலிஸார் விரும்பவில்லை.
நைஜீரியா, மலேஷியா, லண்டன், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள வங்கிக் கணக்குகளுக்கு அவர் பணம் அனுப்பியுள்ளார்.
குறித்த நபர் அப்பெண்ணின் அடையாள அட்டையொன்றை வைத்திருந்தார். அது புளோரிடா மாநிலத்தின் மாதிரி சாரதி அடையாள அட்டை எனத் தெரிவிக்கப்பபடுகிறது.
அண்மையில் தனது காதலி லண்டனில் கடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்த அவர் அப்பெண்ணை மீட்குமாறும் கோரினார்.
ஆனால் விசாரணையின் பின்னர் அப்படியொரு பெண்ணே இல்லையென பொலிஸார் தெரிவித்தபோது பெரும் அதிர்ச்சியடைந்தாராம் அந்நபர்.
goodheart Wednesday, 02 March 2011 03:23 PM
நல்ல வேலை, கடத்தல் காரர்களுக்கு பணம் கொடுக்காமல் விட்டார் .
Reply : 0 0
xlntgson Wednesday, 02 March 2011 08:50 PM
இம்மாதிரியான மின்னஞ்சல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. பதில் பண்ணினாலும் வங்கி விபரம் கடன் அட்டை விபரங்களை கொடுக்கக்கூடாது. குரியரில் அனுப்புவதாக கூறி, அதற்கான செலவு தொகை அனுப்பினாலும் தொலைந்தது அதன் பின் ஒரு பதிலும் இராது. வெளிநாட்டு தொலைபேசி எண்களை கொடுத்து பேச சொல்கின்றனர் ஆனால் அந்த எண்களோடு தொடர்பு கொண்டால் அதிக நேரம் பேச வைக்க சதி இருக்கிறது. இதன் மூலம் தொலைபேசி கட்டணம் நமக்கு நஷ்டம் நாட்டுக்கு செலாவணி இழப்பு. வங்கி கணக்குக்கு செக்காகவோ டிரப்டாகவோ அனுப்ப மத்திய வங்கியின் அனுமதி வேண்டும் இலங்கையில்.
Reply : 0 0
NASICK Friday, 04 March 2011 02:54 PM
நல்ல காலம் 20 கோடி கொடுக்காமல் விட்டார்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago