2025 மே 14, புதன்கிழமை

பாலியலில் ஈடுபட்டிருந்த போது காயமடைந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு

Kogilavani   / 2012 ஏப்ரல் 24 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், பாலியல் உறவுக்கொண்டிருந்த போது எதிர்கொண்ட விபத்திற்காக நீண்டகால போராட்டத்தின்பின் நஷ்டஈடு பெற்றுள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத மேற்படி  பெண் தனது கடமை நிமித்தம் ஹோட்டலொன்றில் தங்கியிருந்தபோது, தனது காதலருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை அறையில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழ் உடைந்து அவரது தலையில் வீழ்ந்தது. இதனால் அப்பெண் காயமடைந்தார்.

2007 ஆம் ஆண்டு தொலைதூர சிறிய நகரமொன்றுக்கு அப்பெண் அனுப்பப்பட்டபோது இச்சம்பவம் இடம்பெற்றது.

அப்பெண் பணியில் ஈடுபட்டிருக்கும் போது காயமடையும் ஊழியர்களுக்குரிய நஷ்ட ஈடு கோரி விண்ணப்பித்தார்.
ஆனால் அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது காயம் ஏற்படவில்லை எனவும் பாலியல் உறவின் ஈடுபட்டிருந்தபோதே காயம் ஏற்பட்டது என்பதால் அவர் ஊழியர்களுக்குரிய நஷ்ட ஈட்டை பெற முடியாது என அவர் பணியாற்றிய அரசாங்க நிறுவனம் தெரிவித்தது.

இதனால் அப்பெண் தமக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு கோரி அவுஸ்திரேலிய சமஷ்டி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அப்ணெ;ணின் பெயர் வெளியிடப்படவில்லை. எனினும் அவர் 30 வயதை கடந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .