2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதியில் பாரியளவில் நடத்திவரப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையமொன்று, மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் இன்று (19) அதிகாலை முற்றுகையிடப்பட்டது.

அங்கிருந்து 320,000 மில்லிலீற்றர் கோடா மற்றும் 56,000 மில்லிலீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத போதைப்பொருள் பாவனையைக் கண்டறியும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினால் தொடர்ச்சியான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேவேளை, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 7,000 மில்லிலீற்றர் கசிப்பு மற்றும் போதைப்பொருள்களுடன் எழுவர், இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .