2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி குடும்பஸ்தர் கைது

Gavitha   / 2016 ஜூலை 28 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா மொடர்ன் பாம் வீட்டுத்திட்ட பகுதியில், கடந்த இரண்டு வருட காலமாக 17 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்த குடும்பஸ்தரை நேற்று புதன்கிழமை (27) காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிப்புக்குள்ளான சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டள்ளார்.

தனது தாய் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் நிலையில், குறித்த சிறுமிய கடந்த ஐந்து வருடங்களாக தனது சித்தியின் வீட்டில் (தாயின் சகோதரி) இருந்து வந்துள்ளார்.

எனினும் கடந்த 2 வருட காலமாக இவர், சித்தியின் கணவரால் வண்புனர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .