2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

கொரோனாவால் தபேலா வாத்தியக் கலைஞர் பலி

Niroshini   / 2021 செப்டெம்பர் 19 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ் தில்லைநாதன்  

ஈழத்தின் மூத்த பிரபல்யமான தபேலா வாத்தியக் கலைஞர் சதா வேல்மாறன், கொரோனா தொற்றால், நேற்று (18) காலமானார்

கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.

விடுதலைப் போராட்ட காலத்தில் ஒலிப்பதிவாகிய கணிசமான பாடல்கள், பெருமளவான பக்திப்பாடல்களுடன் ஆயிரக்கணக்கான அரங்க நிகழ்வுகளிலும், அவர் அணி இசை செய்துள்ளது.

அதேவேளை, நூற்றுக்கணக்கான மாணவர்களையும் மிருதங்க, தபேலாக் கலைஞர்களாகவும் உருவாக்கிய பெருமைக்குரியவராகவும் விளங்கியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X