2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

அல்வாயில் ரவுடிகள் அட்டகாசம்

Niroshini   / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ் தில்லைநாதன் 

வடமராட்சி - அல்வாய் பகுதியில், ரவுடி கும்பலால் இரண்டு குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், சொத்துக்களும் நாசம் செய்யப்பட்டுள்ளன.

அல்வாய் வடக்கு, மகாத்மா வீதியில், கடந்த 2ஆம் திகதியன்று, அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி கும்பலைச் சேர்ந்து ஒருவரால், அங்குள்ள வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து,  சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த நபர்,  சனிக்கிழமை(25) மாலை பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, குறித்த நபரின் சகோதரர் ஒருவர், சிலரை இணைத்துக் கொண்டு, சனிக்கிழமை(25) இரவு, குறித்த கிராமத்துக்குள் புகுந்து, அங்குள்ள குடிசைகளுக்கு தீ வைத்ததுடன், பல வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளார். 

இதன் காரணமாக அச்சமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி உள்ளதாகவும் இதனால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .