2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் முதலை

Freelancer   / 2022 நவம்பர் 25 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் முதலை இருப்பதாக இன்று(25) காலை அவ்வீதியால் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர். 

உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டைமானாறு ஏரியில் முதலை இருப்பதாக ஏற்கனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .