2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

அரசாங்கத்துக்கு எதிராக வலுவான படை திரளும்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு எதிராக ஒரு வலுவான படை உருவாக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம தெரிவித்தார். 

நாவலையில் உள்ள கொஸ்வத்த பகுதியில் சில கட்சிகளுடன் இன்று (02) கலந்துரையாடிய பின்னரே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு எதிராக ஒரு வலுவான படையை உருவாக்குவது காலத்தின் தேவை என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் அதிகாரத்தில் பேராசை கொண்டவர்களாக இருப்பதால் அரசாங்கத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான 'புதிய லங்கா சுதந்திரக் கட்சி' மற்றும் அரசாங்க விரோதக் கட்சிகள் எட்டு ஒன்றிணைந்து 'அபி ஸ்ரீ லங்கா' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X