2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

காத்தான்குடி நகர சபை எதிர்க்கட்சித் தலைவராக நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினர் தெரிவு

Super User   / 2010 ஏப்ரல் 28 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவராக நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினர் அப்துர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சுயாதீன குழுவாக போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றியிருந்தது.

இந்த அமைப்பு எந்தவித அரசியல் கட்சிகளுக்கும் சார்பில்லாமல் காத்தான்குடி நகர சபை தேர்தலில் சுயாதீனமாக போட்டியிட்டது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கைப்பற்றிய ஒரு ஆசனத்தை தங்களின் உறுப்பினர்களுக்கிடையில் சுழற்சி முறையில் பகிர்ந்து கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .