Freelancer / 2023 ஜனவரி 30 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பாதையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த 27 வயதுடைய சண்முகலிங்கம் பிரகாஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)

21 minute ago
34 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
6 hours ago