2021 ஒக்டோபர் 19, செவ்வாய்க்கிழமை

கொட்டகலை விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

Freelancer   / 2021 ஜூலை 31 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், பி.கேதீஸ்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹட்டன் - நுவரெலியா ஏ -7 பிரதான வீதியில், பத்தனையிலிருந்து கொட்டகலை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் ஹட்டனிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக லொறியும் கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்னால் இன்று மாலை 4.30 மணியளவில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் அதில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் ஒருவர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், கொட்டகலை பொரஸ்கிரிக் தோட்டத்தை சேர்ந்த  35 வயதான ஆர்.சுரேஷ்குமார் என  அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X