Freelancer / 2021 ஜூலை 26 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் அமைப்பாளர்களுக்கு அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்யப்படும் அநீதிகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, நிலைமையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
கலந்துரையாடல் குறித்து கருத்து தெரிவித்த சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர, தேர்தல் முறை திருத்தம், ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் மற்றும் உரங்கள் வழங்குவது போன்ற பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக கலந்துரையாடல் நீடித்தது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய, அமைச்சர்கள் நிமல் சிறிபாலா டி சில்வா, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்கள் தயாசிறி ஜெயசேகர மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினர் மற்றும் ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
9 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago