2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பிக்க விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு பிரிட்டிஷ் நீதிமன்றம் அனுமதி

Super User   / 2010 மார்ச் 19 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களும் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியும என்றும், அவர்களுக்கு போர்க் குற்றத்தில் தொடர்பு இருந்தால் புகலிடம் தரக் கூடாது என்றும் பிரிட்டிஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


விடுதலைப்புலிகள் அமைப்பில் 1992 ம் ஆண்டு இணைந்து கொண்ட நபர் ஒருவர் அந்த அமைப்பில் பல பதவி நிலைகளை வகித்திருந்தார். விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினரை வன்னியில் இருந்து காடுகள் ஊடாக கொழும்புக்கு நகர்த்தும் நகர்வுப் பிரிவிலும் அவர் அங்கம் வகித்திருந்தார்.

அத்துடன், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மானின் பாதுகாவலராகவும், புலனாய்வுப் பிரிவின் தாக்குதல் அணியின் இரண்டாம் நிலை தளபதியாகவும் பணியாற்றியிருந்தார்.

அவர் கடந்த 2006ம் ஆண்டு கொழும்புக்கு புலனாய்வுக்காக அனுப்பப்பட்ட போது, அவரது நடவடிக்கைகளை இலங்கை அரசு கண்காணித்தது. இதையடுத்து அவர் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றார்.

அங்கு அரசியல் புகலிடம் கோரி அவர் இங்கிலாந்து நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினராக இருப்பினும், அவர் அரசியல் தஞ்சம் கோர உரிமை உடையவராவார் என்று உத்தரவிட்டது.

அதேசமயம், சம்பந்தப்பட்ட நபர் இலங்கையில் நடைபெற்ற போரில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதால் அவர் போர்க் குற்றவாளியாகிறார். எனவே அவருக்கு அரசியல் புகலிடம் வழங்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இவருடைய போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்துமாறும் இங்கிலாந்து அரசுக்கு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியல் புகலிடம் கோர முடியும்.

அதேசமயம், போர்க்குற்றம் தொடர்பாக அவர்களுக்குத் தொடர்பு இருந்தால் புகலிடம் கிடைக்காது என்பதை இங்கிலாந்து நீதிமன்றம்  தெரிவித்திருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .