Freelancer / 2022 நவம்பர் 25 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதஞ்சன்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் 20 ஆவது கிலோமீற்றர் பகுதியில் நேற்று (24) மாலை 5.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
மண்வெட்டி பிடி வெட்டுவதற்க்காக காட்டிற்கு சென்ற குடும்பஸ்தரே யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பனில் வசித்து வருகின்ற பச்சைமுத்து-புலேந்திரன் (வயது48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளது. (a)

14 minute ago
17 minute ago
22 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
22 minute ago
52 minute ago