2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

மேலதிக நேர வேலை பகிஷ்கரிப்பில் தபால் ஊழியர்கள்

Super User   / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுஸைன்)

நேற்று நள்ளிரவு முதல் மேலதிக நேர வேலை  பகிஷ்கரிப்பை மேற்கொள்ளப் போவதாக தபால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய தபால் மா அதிபரை மாற்றக் கோரியே அவர்கள் இப்பகிஷ்கரிப்பை மேற்கொள்கின்றனர்.

தபால் மா அதிபர் மேற்கொண்ட மாற்றங்கள் குறித்து தாம் அதிருப்தியடைவதாகவும் இம்மாற்றங்கள் தபால் சேவையின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தபால்துறையில் சுமார் 5000 வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டியுள்ளன. சேவைகளை சுமுகமாக நடத்துவதற்காக ஊழியரகள் மேலதிக நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர் என இலங்கை தபால் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

'நாம் மேலதிக  நேர வேலை பகிஷ்கரிப்பை மேற்கொண்டால் பெரும்பாலான ஊழியர்கள் முழுநேர பகிஷ்கரிப்பை மேற்கொண்டதைப் போல் அமையும்' என இச்சங்கத்தின் தலைவர் ஜயந்த விஜேசிங்க கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .