2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

9 கிலோகிராம் ஐஸ் மீட்பு: நால்வர் கைது

Editorial   / 2021 செப்டெம்பர் 15 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

79 மில்லியன் ருபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் சந்தேகத்தின் பேரில் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 9 கிலோ 914 கிராம் நிறை​கொண்ட ​​​​ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 14ஆம் திகதி இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே, கடல் வழியாக நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

ஐஸ் போதைப்பொருளும் டிங்கி ரக படகொன்றும் தமது ​பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X