2023 ஜூன் 07, புதன்கிழமை

ஆசிரியர்கள் கௌரவிப்பு

Freelancer   / 2023 மார்ச் 28 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவா ஸ்ரீதரராவ் 

 சப்ரகமுவ மாகாணத்தில் சிறந்த அதிபர், ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு  அட்டுலுகம கல்வி அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண பிரதான செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுஜானி விஜேதுங்க ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

 இதன்போது; 2022ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் சிறந்த அதிபர், ஆசிரியருக்கான குரு பிரதீபா பிரபா விருதுகளை பெற்ற சப்ரகமுவ மாகாணத்தை சேர்ந்த 15 பேரும் மற்றும் சப்ரகமுவ மாகாண கல்வி வலய மட்டத்தில் சிறந்த அதிபர் ஆசிரியர்கள் 50 பேரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .