2023 ஜூன் 01, வியாழக்கிழமை

மும்பையில் வைத்தியர்கள் சாதனை

Ilango Bharathy   / 2023 மார்ச் 13 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மும்பையிலுள்ள தனியார் வைத்திய சாலையொன்று 24 மணிநேரத்தில் இதயம் உள்ளிட்ட 6 உடல் உறுப்புகள்  மாற்று அறுவை சிகிச்சைகளை  மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து அவ்வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”3 நன்கொடையாளர்கள் உட்பட 8 பேரிடம் இருந்து இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானமாகப்  பெற்றப்பட்டதாகவும், அதைவைத்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை  மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 25 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 30 செவிலியர்கள் உள்ளிட்டோருடன் அறுவை சிகிச்சை உட்பட ஆறு சிகிச்சைகள்  வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .