2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

சென்னையில் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம்

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி, சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதை கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நிதி தேவையில்லை என்று கடிதம் எழுதிய சூரப்பாவை பதவி நீக்கம் செய்யுமாறு

வலியுறுத்தியும், திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கிண்டியில்

அண்ணா பல்கலைக்கழகம் முன் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக இளைஞரணியினர் மற்றும் மாணவர்கள் என சுமார் 500இக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், மத்திய அரசைக் கண்டித்து பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு அவர்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .