2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை

மருந்து தட்டுப்பாட்டை நீக்கக் கோரி கையெழுத்து போராட்டம்

Freelancer   / 2023 ஜனவரி 27 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ. கீதாஞ்சன்

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கக்கோரி அதிகாரிகளை வற்புறுத்தும் கையெழுத்துப் போராட்டம் நேற்று (26) முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்டது. 

‘அநீதியான அரசாங்கத்தின் மக்களுக்கு பாதகமான தன்னிச்சையான வரிக்கொள்கையைக் கண்டிப்போம்’ என்ற தொனிப்பொருளில் கடந்த 23 ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை கறுப்பு வாரமாக அறிவிக்கப்பட்டு, வைத்திசாலையின் வைத்தியர்கள் கைகளில் கறுப்புத் துண்டுகளை கட்டிக்கொண்டு, தங்கள் எதிர்பினை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம், மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, மருந்துக்கான தட்டுப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளதுடன் மக்களிடம் இருந்து கையெழுத்து பெறும் நடவடிக்கையிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஈடுபட்டனர். 

அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நிலவும் மருந்து தட்டுப்பாடு, அதிகரித்துவரும் மற்றும் சமாளிக்கமுடியாத மருந்துப் பொருட்களுக்கான விலையேற்றம், மருந்து கொள்வனவில் இடம்பெற்று வருவதாக கூறப்படும்  ஒழுக்கற்ற மற்றும் தவறான பொறிமுறைகளை உடன் நீக்கி, மருந்து தட்டுப்பாடு இல்லாதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .