2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை

கடலரிப்பால் சேதம்…

Editorial   / 2022 டிசெம்பர் 09 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமகால அசாதாரண  காலநிலை மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக காரைதீவில் பாரிய கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால்  காரைதீவின் வடபுற எல்லையில் உள்ள கடற்கரைப்பிள்ளையார் ஆலயம் ,காரைதீவு கடற்படை முகாம்  மற்றும்  நினைவுத் தூபி என்பன பலத்த சேதத்துக்குள்ளாகியிருக்கின்றன.

மேலும் கடற்கரை பிரதேசத்தில் சுமார் 20 அடி கடற்கரை பரப்பு கடலுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றது.

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் குறித்த பிரதேசங்களுக்கு  இன்று(9) வெள்ளிக்கிழமை விஜயம் செய்து அவற்றை பார்வையிட்டு உரிய அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தி இருந்தார்.

இதேவேளை காரைதீவில் உள்ள  மாளிகைக்காடு மையவாடி கடல் அரிப்பு தடுப்பு கற்சுவர்கள் கடல் அரிப்பால் பாரிய சேதத்துக்குள்ளாகி மையவாடி ஆபத்துக்குள்ளாகி உள்ளது.

 அந்த மைய வாடிக்கும் விஜயம் செய்து அங்கு கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுடன் இது தொடர்பாக பேசி இருந்தார் .

அவர் அங்கு கூறுகையில், அரச நிதியை திட்டமிட்டு இதன் அடித்தளத்தை அகலமாக்கி செய்திருக்க வேண்டும் அப்படி இல்லாத காரணத்தால் தான் இந்த சேதம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது . எதிர்காலத்தில் இதனை அகலமாக்கி செய்ய வேண்டும். முழு ஊருக்குமான ஒரே மயானம் இது. இதனைப் பாதுகாக்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டார். ( வி.ரி.சகாதேவராஜா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .