2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

கலாசார விழாவும் இலக்கிய விழாவும்

Editorial   / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் கலாசார அதிகார சபையும் ஒன்றிணைந்து நடத்திய, கலாசார விழாவும்  இலக்கிய விழாவும் நந்தகோபன் கலாசார மண்டபத்தில், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே. கருணாகரனும் சிறப்பு அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தும் கௌரவ அதிதிகளாக சுகாதார வைத்திய அதிகாரி த. பிரபாசங்கர், பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி எல். விவேகானந்தராஜ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எம். ஜெயசந்திரன் கலந்துகொண்டார்கள்.

இந்நிகழ்வில் ‘சிகரம்’ நூல் வெளியீடும் எட்டு கலைஞர் கௌரவிப்பும் மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  க. விஜயரெத்தினம்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .