2023 ஜூன் 04, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 25 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோரியக்குளம் பகுதியில், வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு  தயாரிப்பிலான துப்பாக்கியுடன், சந்தேக நபர் ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்,  மோரியகுளம், தப்போவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கருவலகஸ்வெவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல ஒன்றின் அடிப்படையில், நேற்று (24) குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை சோதனை செய்த போதே,  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து,  போர 12 வகை துப்பாக்கி ஒன்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் 5 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில், கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .