2025 ஜூலை 10, வியாழக்கிழமை

குற்றப்புலனாய்வு அதிகாரிக்கும் ஹோட்டல் உரிமையாளருக்கும் தொடர்ந்து விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம்.மும்தாஜ்)

இந்திய இளைஞர் டீ. செல்வராஜ் என்பவரின் கொலை தொடர்பில் முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள  குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரி சந்தன த சில்வா மற்றும் கொழும்பு கிருளப்பனையிலுள்ள இந்திய உணவகத்தின் உரிமையாளர் எம்.லெஸ்லி ராஜ்குமார் ஆகிய இருவரையும் தொடர்ந்து  இம்மாதம் 15 ஆம் திகதி வரைத் தடுப்புக் காவலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிபதி சேசிரி ஹேரத் உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் குறித்த இந்திய இளைஞரின் இறந்த உடலை முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு பகுதியில் வைத்து கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி கடலில் வீசிவிட்டுத் தப்பிச் செல்லும்போது, பொதுமக்கள் வழங்கிய தகவலின் பின் முந்தல் நகரில் வைத்து முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதோடு புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்திய உணவகத்தில் சமையல்காரராகப் பணியாற்றிய இந்திய இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.

இச்சந்தேக நபர்கள் இருவரும் புத்தளம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது, கொலை செய்யப்பட்ட இந்திய இளைஞரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரைத் தமக்குக் கிடைக்கவில்லை என முந்தல் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபர்களை தொடர்ந்து இம்மாதம் 15 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாரு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .