2023 ஜூன் 01, வியாழக்கிழமை

இலங்கையில் முதல் தர விநியோகஸ்தராக மட்டக்களப்பின் ரஞ்சிதமூர்த்தி தெரிவு

S.Sekar   / 2023 பெப்ரவரி 17 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

நெஸ்லே நிறுவனத்தின் இலங்கை ரீதியான 120விநியோகஸ்தர்களில் இவ்வருடம் மட்டக்களப்பு விஜேய் கொன்ஸ்ரக்ஷன் உரிமையாளர் தொழிலதிபர் கலாநிதி வினாயகமூர்த்தி ரஞ்சிதமூர்த்தி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இலங்கையில் உள்ள 120 விநியோகஸ்தர்களில் மிகவும் சிறந்த நெஸ்லே உற்பத்தி பொருள் விநியோகஸ்தராக கலாநிதி ரஞ்சிதமூர்த்தி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

நெஸ்லே பொருட்களுக்கான முதல்தர விநியோகஸ்தர் (SRI LANKA’S MOST OUTSTANDING DISTRIBUTOR AWARD) எனும் அகில இலங்கை விருதினை மட்டக்களப்பு "விஜேய் கொன்ஸ்ரக்ஷன்" நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது. 

இந்த விருது வழங்கும் விழா அண்மையில் கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்றது. நெஸ்லே நிறுவனத்தின் தேசிய விற்பனை மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவின் போதே இவ்விருது வழங்கப்பட்டது.

இதற்கான விருது நெஸ்லே நிறுவனத்தின் தற்போதைய முகாமைத்துவ பணிப்பாளர் ஜேசன் அவென்சினா, வருங்கால முகாமைத்துவ பணிப்பாளர் பேர்ன்ஹார்ட் ஸ்டெபான் மற்றும் இலங்கைக்கான விற்பனை சிரேஷ்ட உப தலைவர் ஜகத் வெதகேயினால் வழங்கி வைக்கப்பட்டது.

விருதை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான வி. றஞ்சிதமூர்த்தியின் மகனும் இந்நிறுவனத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருமான ற. விஜிபன் மற்றும் வி.ரஞ்சிதமூர்த்தியின் மகளும் நிறுவனத்தின் பொதுமுகாமையாளருமான திருமதி. விஜிதா நவரூபன் ஆகியோர் பெற்று கொண்டார்கள்.

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவரான கலாநிதி ரஞ்சிதமூர்த்தி பொதுச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

வருடா வருடம் நடத்தப்பட்டு வரும் இந்த விருது வழங்கும் போட்டி கடந்த மூன்று வருடங்கள் கொரோனா காரணமாக இடம் பெறவில்லை.

கடந்த 20 வருட காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நெஸ்லே ஏக விநியோகஸ்தராக விஜய் கன்ஸ்ட்ரக்சன் கம்பனி தொடர்ந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு அவரது மகள் மகன் ஆகியோர் பிரதான பங்கை வகிக்கின்றார்கள்.

கடந்த கொரோனா காலகட்டத்திலும் சீரான சிறப்பான விநியோகத்தை மேற்கொண்டமையும் முதலிடம் பெற்றமைக்கு ஒரு காரணம். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கக்கூடிய 1250 கடைகளுக்கு நேரடியாக தனது 52 பணியாளர்களோடு இந்த விநியோகத்தை செய்து வருவது நெஸ்லே கம்பனியின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. இதற்கு முன்பும் ஒரு தடவை முதலிடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .