S.Sekar / 2021 மே 17 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதிவு செய்யப்பட்ட மற்றும் புதிய வாகனங்களுக்கு பிரத்தியேகமான லீசிங் தீர்வுகளை வழங்குவதற்காக உள்நாட்டு வாகன விற்பனையாளரான இந்திரா டிரேடர்ஸ் உடன் பங்காண்மையில் கைச்சாத்திட்டுள்ளதாக செலான் வங்கி அறிவித்துள்ளது.
இந்தப் பங்காண்மையினூடாக, தகைமை வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு தமக்கு விருப்பமான வாகனங்களை விசேட வட்டி வீதங்களின் கீழ், இலவச வாகனப் பதிவு, விலைக்கழிவுகளுடனான காப்புறுதி வசதிகளுடன் கொள்வனவு செய்ய முடியும். வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளினுள் தமது வாகனத்தை சிக்கல்களின்றி சௌகரியமாக பெற்றுக் கொள்ளும் வகையில் தனது லீசிங் சேவைகளை செலான் வங்கி மீளமைத்துள்ளது.
சௌகரியமான லீசிங் வசதிகளை வழங்குவதற்கு செலான் வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், வாடிக்கையாளர்களின் செலவு செய்யும் ஆற்றலுக்கமைய குறைந்த ஆவணங்களுடன் லீசிங் தீர்வுகளை வழங்கவும் முன்வந்துள்ளது. தமது கனவு வாகனத்தை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு பிரத்தியேகமாக உதவும் வகையில் இந்தத் தெரிவுகள் அமைந்துள்ளன.
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago