2023 ஜூன் 01, வியாழக்கிழமை

மணப்பெண்ணின் மேக்-அப்பால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

Ilango Bharathy   / 2023 மார்ச் 07 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மணப்பெண்ணின் முகம்  மேக்கப்பால்  மாற்றமடைந்ததால், ஆத்திரமடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள அரசிகிரா என்ற பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

திருமணத்திற்கு 10 நாட்கள் இருந்த நிலையில், தன்னை அழகு படுத்திக்கொள்ள வேண்டும் என அருகில் இருந்த என்ற அழகு சிகிச்சை நிலையத்திற்கு அவர் சென்றுள்ளார்.

இந்நிலையில் அப்பெண்ணிடம் அழகுக் கலை நிபுணர் ”தான் புதுவகை மேக் அப் ஒன்றை கற்று வைத்துள்ளதாகவும் அதனை? அவரிடம் முயற்சி செய்து பார்க்கவா எனக் கேட்டதாகவும் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இதன்ஒரு பகுதியாக மணப் பெண்  நீராவியில் ஆவி பிடித்துள்ளபோது அவரது முகம் திடீரென வெந்துபோகவே அதிர்ச்சியடைந்த மணப்பெண், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

இப் புது மேக் அப் காரணமாக பெண்ணின் முகமே மாறிப்போனதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த எதிர்பாராத நிகழ்வு காரணமாக மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். திருமணம் நின்று போன நிலையில், குறித்த அழகுக் கலை நிபுணர்  மீது வழக்குப் பதிவு செய்த பொலிஸார் அவரை விசாரித்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .