2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

மன்னாரில் 39 மாணவர்கள் 9A சித்தி

Freelancer   / 2022 நவம்பர் 26 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம்    மாலை வெளியாகியிருந்தது.

வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மன்னார் மாவட்டம் மன்னார் கல்வி வலயத்தில் 39 மாணவர்கள் 9A சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதற்கு அமைவாக மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவிகள் 15 பேர் 9A சித்தி பெற்றுள்ளனர்.

மேலும் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவர்கள் 8 பேர் 9A சித்திகளையும்,

மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவர்கள் 7 பேர் 9 A சித்திகளையும்,   

பேசாலை பற்றிமா  மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9 A சித்திகளையும்,

வங்காலை  சென் ஆன்ஸ் பாடசாலை மாணவர்கள் 2 பேர் 9 A சித்திகளையும், 

நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவர்கள் 2 பேர் 9 A சித்திகளையும்,

அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி ஒருவர் 9A சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .