Niroshini / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில், தொடர்ச்சியாக வீதியில் வலைகளை உலரவிடும் செயற்பாடுகளில் ஈடுபடும் மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக, மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கட்டுகொட்டு, ஜீவபுரம், ஜிம்றோன் நகர், சாந்திபுரம் போன்ற கிராமங்களில் ஒரு சில மீனவர்கள் வீதிகளில் தாங்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் உலர விடுவதால் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
பல முறை மீனவர்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்ட நிலையிலும், பொறுப்பற்ற மீனவர்கள் சிலரின் செயற்பாட்டால், நேற்று (25) இரவு, மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் விபத்தில் சிக்குண்டனர்.
இதில், நான்கு மாத கர்ப்பிணி பெண் ஒருவரும் சிறுகுழந்தை ஒன்றும் படுகாயங்களுக்குள்ளான நிலையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக, வீதிகளில் வலைகளை உலரவிடும் மீனவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இவ்வாறு வீதிகளில் உலர விடப்பட்ட வலைகளை உடனடியாக அப்புறப்படுத்தி கையகப்படுத்துமாறும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, இந்த விபத்தடன் தொடர்புபடைய மீனவர்கள் இருவரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
43 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
45 minute ago
2 hours ago