2022 ஜனவரி 22, சனிக்கிழமை

கொட்டாவை வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்தது

Editorial   / 2021 நவம்பர் 25 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில். பன்னிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டாவையில் உள்ள வீடொன்றிலும் காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியுள்ளது.

இந்நிலையில், சமையல் எரிவாயு வெடித்துச் சிதறும் சம்பவங்கள், கொழும்பு, வெலிகம மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களிலும் இடம்பெற்றள்மை குறிப்பிடத்தக்கது.

தரமற்ற காஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமையால் அதில், கசிவு ஏற்படுவதாகவும். அதன்பின்னரே வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமையலறை மற்றும் ஏனை அறைகளில் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அச்சந்தர்ப்பத்தில் வீட்டில் யாரும் இருக்கவில்லை. அதனால், உயிர்ச் சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X